உணவு தயாரிப்புகளில் செயற்கை நிறங்களை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ள Nestle
நெஸ்லே நிறுவனம், அதன் அனைத்து உணவு தயாரிப்புகளிலும் இனி செயற்கை நிறங்களை பயன்படுத்துவதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அனைத்து தயாரிப்புகளிலும்
சுவிட்சர்லாந்தின் வேவே நகரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உணவு நிறுவனமான நெஸ்லே (Nestlé), 2026 இறுதிக்குள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து தயாரிப்புகளிலிருந்தும் செயற்கை உணவு நிறங்களை (Artificial Colourings) நீக்க முடிவு செய்துள்ளது.

இது போன்ற பெரிய அளவிலான மாற்றத்தை மேற்கொள்ளும் முதல் முக்கிய உணவு நிறுவனம் நெஸ்லே தான் என அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உணவு நிறுவனங்கள் ஆரோக்கியமான தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, GLP-1 வகை உடல் எடை குறைக்கும் மருந்துகள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் உணவுப் பொருட்களின் சேர்மங்கள் மற்றும் தரம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
புதிய தரத்தில்..
நெஸ்லே நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, உணவு தயாரிப்புகளில் இயற்கை நிறங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தும் புதிய தரத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, நுகர்வோரின் நம்பிக்கையை உயர்த்துவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உணவு நிறுவனங்கள் ஆரோக்கியமான தயாரிப்புகளுக்காக பல மாற்றங்களை மாற்றம் செய்துவரும் நிலையில், நெஸ்லே எடுத்த இந்த முடிவு உணவு தொழில்துறையில் மிகப்பெரிய முயற்சியாக அமையும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |