கோடிகளில் புரளும் ஹன்சிகா.. இவரின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகி,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி பல சீரியல்கள் நடித்து தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
அதை தொடர்ந்து 2007ம் ஆண்டு தேசமுத்துரு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
பின் தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் கலமிறங்கினார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதன்படி பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த திரைப்படத்தின் பின் ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவான வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதையடுத்து தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்தார்.
இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் கடந்த வருடம் சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தவகையில் நடிகை ஹன்சிகாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாியுள்ளது.
நடிகை ஹன்சிகாவின் சொத்து மதிப்பு
நடிகை ஹன்சிகாவின் மொத்த சொத்து மதிப்பு 45 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் ஒரே வருடத்தில் 5 கோடி வரை சம்பாதிப்பதாகவும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் முதலீடும் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |