நெட்பிக்ஸ் ஆவணத் தொடர் எதிரொலி: மேகன் மார்க்கல் கட்டுரைக்கு மன்னிப்பு கோரிய சன் பத்திரிக்கை
பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் குறித்த மோசமான கருத்துக்களை வெளியிட்டு இருந்த ஜெர்மி கிளார்க்சனின் கட்டுரைக்காக சன் பத்திரிக்கை மன்னிப்புகேட்டுள்ளது.
ஜெர்மி கிளார்க்சன் கருத்துக்கு கண்டனம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பாக சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் நெட்ஃபிக்ஸ்ஆவணப்படம் வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்திற்கு அரச குடும்ப ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், அவர்கள் மீது வெறுப்பையும்வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெட்ஃபிக்ஸ் ஆவணத் தொடர் வெளிவந்ததை அடுத்து, அவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சன் பத்திரிக்கையில்டிசம்பர் 16ம் திகதி ஜெர்மி கிளார்க்சன் எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்து இருந்தது.
Oh dear. I’ve rather put my foot in it. In a column I wrote about Meghan, I made a clumsy reference to a scene in Game of Thrones and this has gone down badly with a great many people. I’m horrified to have caused so much hurt and I shall be more careful in future.
— Jeremy Clarkson (@JeremyClarkson) December 19, 2022
அதில் இளவரசி மேகன் மார்க்கலை "செல்லுலார் மட்டத்தில்" வெறுக்கிறேன் என்பது போன்ற மிக மோசமான கருத்துகள் இடம்பெறவே, இந்தகட்டுரை தொடர்பான எதிர்ப்புகள் பலமாக வெளிவரத் தொடங்கியது. (கட்டுரையின் தீவிர தன்மை குறித்து அவை தொடர்பான விவரங்கள் இங்கு வெளியிடப்படவில்லை)
இது தொடர்பாக சுதந்திர பத்திரிகை தரநிலை அமைப்பான (Ipso) வெளியிட்ட குறிப்பில், சன் பத்திரிக்கையின் சமீபத்தில் வெளியான ஜெர்மி கிளார்க்சனின் கட்டுரை 20,000க்கும் அதிகமான புகார்களை பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கோரிய சன் பத்திரிக்கை
இதையடுத்து டச்சஸ் ஆஃப் சசெக்ஸை பற்றி ஜெர்மி கிளார்க்சன் கட்டுரையை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், "உண்மையாகவருந்துகிறோம்" என்றும் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மேலும் கட்டுரையாளர்களின் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துகளாகும், ஆனால் ஒரு வெளியீட்டாளராக "சுதந்திரமானவெளிப்பாட்டுடன் பொறுப்பும் சேர்ந்தது ” என்று சன் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கட்டுரைக்கு ஜெர்மி கிளார்க்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த பதிவில் ”மேகனைப் பற்றி நான் எழுதிய ஒரு பத்தியில், கேம் ஆஃப் த்ரோன்ஸில் ஒரு காட்சியைப் பற்றி நான் ஒரு விகாரமான குறிப்பைச்செய்தேன், இது பலருக்கு மோசமாகப் போய்விட்டது. இவ்வளவு காயத்தை ஏற்படுத்தியதற்காக நான் திகிலடைகிறேன், எதிர்காலத்தில் நான்மிகவும் கவனமாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுளார்.
GETTY IMAGES