எலான் மஸ்க்கின் ஒரே பதிவு - 25 பில்லியன் மதிப்பை இழந்த நெட்பிளிக்ஸ்
எலான் மஸ்க்கின் பதிவால், நெட்பிளிக்ஸ் 25 பில்லியன் மதிப்பை இழந்துள்ளது.
நெட்பிளிக்ஸ்
உலகளவில் பிரபல OTT தளமாக உள்ளது நெட்பிளிக்ஸ். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படங்கள், சீரியல்கள் வெளியாகி வருகிறது.
2022 ஆம் ஆண்டில் லண்டனை சேர்ந்த ஹாமிஷ் ஸ்டீல் இயக்கிய ‘Dead End: Paranormal Park’ என்ற அனிமேஷன் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
குழந்தைகள் பார்க்கும் இந்த அனிமேஷன் தொடரில் LGBTQ கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை வலிந்து திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமீபத்தில், டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவரின் கொலை தொடர்பாக ஹாமிஷ் ஸ்டீல் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
மேலும், சார்லி கிர்க் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பயனர் ஒருவர் தனது நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதாக எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.
எலான் மஸ்க்கின் பதிவால் இழப்பு
அதனை ரீடிவீட் செய்த எலான் மஸ்க், உங்கள் குழந்தைகளின் நலத்தை காக்க நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்யுங்கள் என அழைப்பு விடுத்தார்.
Cancel Netflix for the health of your kids https://t.co/uPcGiURaCp
— Elon Musk (@elonmusk) October 1, 2025
இதைத்தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் சந்தாதரர்கள் பலரும் தாங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து, #CancelNetflix என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் நெட்பிளிக்ஸ் பங்கு அதிவேகமாக சரிந்துள்ளது. அதன் சந்தைமதிப்பு 25 பில்லியன் அளவிற்கு சரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதன் மூலதனத்தில் 1.05 சதவீதத்தை இழந்துள்ளது.
இது தற்காலிகமானது தான், விரைவில் நெட்பிளிக்ஸ்ஸின் சந்தைமதிப்பு மீண்டும் அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |