ஆயிரம் பேர்கள்... Netflix அறிவிப்பால் அதிர்ந்த ஊழியர்கள்
Netflix to shed 1,000 jobs: 1,000 பணியிடங்களைக் குறைக்கவுள்ள நெட்ஃப்ளிக்ஸ்.
மற்ற நிறுவனங்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், உலகளவில் 1,000 பணியிடங்களைக் குறைக்கப்போவதாக நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) அறிவித்துள்ளது.
1000 ஊழியர்கள்
உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தொடர்ந்து வாடிக்கையாளர்களையும், பார்வை நேரத்தையும் இழந்து வரும் நெட்ஃப்ளிக்ஸ் தனது நிதி ஆதாரத்தையும், ஊழியர்களையும் மேம்பட்ட முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் உலகளவில் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

2022ஆம் ஆண்டு பணிநீக்கத்தைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. கோவிட் காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகமும், பார்வை நேரம், சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அனைத்தும் படுவேகமாக உயர்ந்த நிலையில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்ந்தது.
ஆனால் கொரோனாவுக்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறியதால் நெட்ஃப்ளிக்ஸ் 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 500 பேரை பணிநீக்கம் செய்தது.
இதைத் தொடர்ந்து தற்போது 1000 பேர் அதாவது நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 6 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த நிலையில், ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஈமெயிலில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரிகளான கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாரான்டோஸ், நம்முடைய குறிக்கோள் இந்த உலகை எண்டர்டெயின் செய்வது அதற்குத் தேவையான அனைத்தையும் மக்களுக்கு அளிப்பது தான்.
இதை முறையாகச் செய்ய ஊழியர்களையும், நிதி ஆதாரங்களையும் ஓழுங்குப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனத் தெரிவித்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் ப்ராடெக்ட், டெக்னாலஜி, லீகல், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் அடங்குவர்.
ஸ்ட்ரீமிங் துறை
அடுத்த வாரம் நெட்ஃப்ளிக்ஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் வேளையில் தற்போது பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. HBO-வின் உரிமையாளரான வார்னர் பிரதர்ஸுடன் பாரமவுண்ட் நிறுவனம் 110 பில்லியன் டொலர் மதிப்பிற்கு இணைந்ததைத் தொடர்ந்து, ஸ்ட்ரீமிங் துறை ஒரு ஒருங்கிணைப்புக் காலகட்டத்தை சந்தித்து வருகிறது.

அதேவேளையில், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற இலவச தளங்கள் தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. நெட்ஃப்ளிக்ஸ், வார்னர் பிரதர்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட இறுதிசெய்திருந்தது, ஆனால் இறுதியில் பாரமவுண்ட் நிறுவனம் அதனை அதிக விலை கொடுத்து வாங்கியது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்தவும் முயற்சி செய்து வருகிறது; இதில் கேமிங் துறையில் நுழைவதும், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு முன்னதாகவும் இடையிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப அனுமதிப்பதும் அடங்கும்.