உலகக்கோப்பை தொடர்: நெதர்லாந்து இரண்டாவது வெற்றி..இருமுறை ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்
நெதர்லாந்து அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது
கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற பஸ் டி லீடே இந்தப் போட்டியிலும் அதே விருதை கைப்பற்றியுள்ளார்
கீலாங்கில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது.
சிமொண்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் நமீபியா - நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நமீபியா 6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரைலிங்க் 43 ஓட்டங்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் லீடே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விக்ரம்ஜித் சிங் 39 ஓட்டங்களும், மேக்ஸ் ஓடௌட் 35 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி வரை களத்தில் நின்ற லீடே 30 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
நமீபியா அணியின் தரப்பில் ஜேஜே ஸ்மிட் 2 விக்கெட்டுகளையும், பிரைலிங்க் மற்றும் பெர்னார்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Twitter