FIFA உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து!
FIFA உலகக்கோப்பையில் அல் துமமா மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனெகல் அணியை வீழ்த்தியது.
தடுப்பாட்டம்
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது போட்டி அல் துமமா மைதானத்தில் நடந்தது.
இதில் நெதர்லாந்து - செனெகல் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் மிரட்டின.
@Alberto PIZZOLI / AFP
எனினும் நெதர்லாந்து அணி தனது முதல் கோலை 84வது நிமிடத்தில் அடித்தது. அந்த அணியின் காடி காக்போ தன்னிடம் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு பின் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (9வது நிமிடம்) நெதர்லாந்தின் டேவி கிளாஸன் கோல் அடித்தார்.
@AP Photo/Petr David Josek
முதல் வெற்றி
இறுதிவரை செனெகல் அணியால் பதில் கோல் திருப்பி முடியாததால், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் செனெகல் அணி 15 ஷாட்களும், நெதர்லாந்து அணி 10 ஷாட்களும் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP
@Getty Images