டி20 உலகக்கிண்ணம்: நமீபியாவை சூறையாடிய நெதர்லாந்து அணி..லீட் ருத்ர தாண்டவம்
நமீபியாவிற்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஃப்ரைலிங்க், ஈடன்
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய நமீபியா அணியில் ஜென் ஃப்ரைலிங்க் 26 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஈடன் 38 பந்துகளில் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் எராஸ்மஸ் 9 பந்துகளில் 18 ஓட்டங்கள் விளாசிய நிலையில் பஸ் டி லீட் பந்துவீச்சில் அவுட் ஆக, அதிரடி காட்டிய ஜேஜே ஸ்மித்தும் (22) அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய நமீபியா அணி 156 ஓட்டங்கள் எடுத்தது. லீட், பீக் தலா 2 விக்கெட்டுகளும், ஆர்யன் மற்றும் கிளாசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பஸ் டி லீட் அதிரடி
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் 7 ஓட்டங்கள் வெளியேற, லெவிட் அதிரடியாக 28 (3 சிக்ஸர்) ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து வந்த கோலின் அக்கர்மன் 32 ஓட்டங்கள் எடுக்க, பஸ் டி லீட் (Bas de Leede) ருத்ரதாண்டவம் ஆடினார்.
அவர் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் (4 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) 72 ஓட்டங்கள் விளாச, நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 72 ஓட்டங்களும், 2 விக்கெட்டுகளும் எடுத்த பஸ் டி லீட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |