டி20 உலகக்கோப்பை: அமீரகத்தை வீழ்த்திய நெதர்லாந்து.. மிரட்டிய இளம் வீரர்
நெதர்லாந்து அணி உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது
19 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய லீடே ஆட்டநாயகன் விருதை பெற்றார்
உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. லீடே பந்துவீச்சில் ஓட்டங்கள் எடுக்க தடுமாறிய அமீரக அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மறுபுறம் க்ளாஸெனின் தாக்குதல் பந்துவீச்சில் துடுப்பாட்ட வீரர் அரவிந்த் 18 ஓட்டங்களில் வெளியேறினார். முகமது வசீம் 41 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொதப்பியதால் ஐக்கிய அரபு அமீரக அணி 8 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியில், தொடக்க வீரர் விக்ரம்ஜித் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ் ஓடௌட் அதிரடியாக 23 எடுத்தும், லீடே 14 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
AFP
நெதர்லாந்து அணி 103 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 16 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார். நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
AFP
அமீரக அணியின் தரப்பில் சித்திக் 3 விக்கெட்டுகளையும், பஸில் ஹமீத், ஆயன் கான், கார்த்திக் மற்றும் சஹுர் கான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Getty Images