இந்த மனிதருக்கு கைகுலுக்கி ஒன்றை கூற காத்திருக்கிறேன்! கோலி குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட நெதர்லாந்து வீரர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் விளாசிய கோலியை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக நெதர்லாந்து வீரர் வெஸ்லி பர்ரேசி கூறியுள்ளார்.
கோலி சாதனை
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49வது சதம் விளாசினார்.
இதன்மூலம் சாதனை படைத்த அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
 Getty Images 
நெதர்லாந்து வீரர்
இதற்கிடையில் தனது கடைசி போட்டியில் இந்திய அணி 12ஆம் திகதி நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வெஸ்லி பர்ரேசி சாதனை படைத்த விராட் கோலியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'அடுத்த வாரம் இந்த மனிதருக்கு கைகுலுக்கி, உங்கள் பெயரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என கூற ஆவலுடன் காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
I am looking forward to shaking this man's hand next week and telling him I will forever remember your name ? #legendofthegame #pureclass #49 pic.twitter.com/OvzSzetE7n
— Wesley Barresi (@Pepe_Barezi) November 5, 2023
 ICC
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   |