கமகமக்கும் கிராமத்து நெத்திலி மீன் குழம்பு: எப்படி செய்வது?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், கமகமக்கும் கிராமத்து நெத்திலி மீன் குழம்பு எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெத்திலி மீன்- ½ கிலோ
- சின்ன வெங்காயம்- 10
- தக்காளி- 2
- இஞ்சி பூண்டு விழுது- சிறிதளவு
- மல்லித்தூள்- 2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- புளிக்கரைசல் - 1 கப்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- தேங்காய்- ½ மூடி
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயம் , மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இது நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூாள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னதாக புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடத்திற்குக் கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதுல நெத்திலி மீனை சேர்த்து 10 நிமிடங்களில் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |