விஜய் விருது விழாவில் புறக்கணிக்கப்பட்ட மாணவி- தமிழகத்தில் முதலிடம்
விஜய் விருது வழங்கும் விழாவில் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா, பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர், திருச்செந்தூர் நேத்ரா முதலிடம், தருமபுரி ஹரிணிகா 2-ஆம் இடம், திருச்சி ரோஹிணி 3ம் இடம் பிடித்துள்ளார்.
இதில் நேத்ரா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட விருது விழாவில் புறக்கணிக்கப்பட்டவராவார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார் விஜய்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இந்நிகழ்வை பலர் பாராட்டினாலும், அரசியலுக்கான அடித்தளம் என விமர்சித்தனர்.
சுமார் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த இவ்விழாவில், சிறிது நேரம்கூட ஓய்வெடுக்காமல் விஜய் நின்றபடியே அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா, 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தற்போது வெளியான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் முதலிடம் பிடித்துள்ளார் நேத்ரா, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடி காரணமாக நேத்ராவின் பெயர் விடுபட்டதாக தெரிகிறது.
சென்னை வந்த நேத்ரா மற்றும் அவரது பெற்றோரிடம் விரைவில் விஜய்யின் வீட்டிற்கு சென்று பரிசு வாங்கி கொள்ளலாம் என சமாதானம் செய்து விஜய் மக்கள் நிர்வாக இயக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |