குழந்தைக்கு மாத்திரையை பொடி செய்ததாக அமைச்சர் சரத் விளக்கம் - நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி
சர்ச்சை வீடியோவிற்கு குழந்தைக்கு மாத்திரையை பொடி செய்ததாக அமைச்சர் சரத் விளக்கமளித்துள்ள நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமைச்சரின் சர்ச்சை வீடியோ
இன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் கலந்து கொண்டு 3 கி.மீ தொடர்ந்து ஓடினார்.

இதில் முதல்வர் விஜய் உடன் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டு ஓடினர்.
இதைத்தொடர்ந்து, மனிதவளத்துறை அமைச்சர் சரத் குமார் கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் Thug life moment என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் சரத் குமார் விளக்கம்
இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் சரத் குமார், "அது 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை.
குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன்.
கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கு முன்பாக அத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கிறார்கள்" என விளக்கமளித்துள்ளார்.
நெட்டிசன்கள் கேள்வி
அமைச்சரின் இந்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், அந்த வீடியோவில் 4 பேர் மட்டுமே உள்ளனர். அதில் குழந்தை இல்லை.
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
— Indra Kumar Theradi (@THE_INDRA_KUMAR) June 26, 2026
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில்… pic.twitter.com/nPX96b0z40
குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |