லண்டனில் வாழும் இந்தியர் கண்ட வித்தியாசமான காட்சி: வைரல் வீடியோ
லண்டனில் வாழும் இந்தியர் ஒருவர், லண்டன் தெரு ஒன்றில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று செல்வதைக் கண்டு வியப்படைந்துள்ளார்.
அவர் அந்தக் காட்சியை வீடியோ எடுத்து சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்ய, அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
லண்டனில் இந்தியர் கண்ட வித்தியாசமான காட்சி
லண்டனில் வாழ்ந்துவரும் ஜெய் தோலக்கியா (Jay Dholakiya) என்னும் இந்தியர், லண்டனிலுள்ள தெரு ஒன்றில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று செல்வதைக் கண்டு வியப்படைந்துள்ளார்.
நம் ஊரில் நாம் பயணிக்கும் ஆட்டோ லண்டனிலா என வியப்படைந்த அவர் அந்தக் காட்சியை சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்ற, பலருக்கு இந்தியா ஞாபகம் வந்துவிட்டது.
வீடியோவைப் பார்வையிட்ட ஒருவர், நான் மணிக்கணக்காக காத்திருக்கிறேன். ஒரு ஆட்டோ கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இன்னொருவர், லண்டனிலும் ஆட்டோ ஓடினால் மக்களுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகும் என கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்.
இதற்கிடையில், அது இந்தியாவின் எந்த பகுதியிலுள்ள ஆட்டோ என்பது குறித்த விவாதமும் எழுந்துள்ளது.
அது கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட ஆட்டோ, அப்படியானால், அது மும்பை ஆட்டோவாகத்தான் இருக்கும் என ஒருவர் கூற, வீடியோ வைரலாகிவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |