62 வயதில் நவல்பென் எடுத்த முடிவு... தற்போது ஆண்டுக்கு சில கோடிகள் வருவாய்
இந்திய மாநிலம் குஜராத்தை சேர்ந்த நவல்பென் சௌத்ரி என்பவர் தமது 62வது வயதில் எடுத்த அதிரடி முடிவால், தற்போது மாதம் 3.5 லட்சம் வரையில் வருவாய் ஈட்டி வருகிறார்.
60 வயது கடந்த நவல்பென் சௌத்ரி
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் 60 வயது கடந்த நவல்பென் சௌத்ரி. பள்ளிப்படிப்பும் இல்லை. ஆனால் தற்போது ஆண்டுக்கு ரூ.1 கோடி வரையில் வருவாய் ஈட்டுகிறார்.
தனது 62வது வயதில் சொந்தமாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் தொழிலைத் தொடங்கினார். இவர் குடியிருந்து வந்த நாக்லா கிராமத்தை பொறுத்தமட்டில் பெண் ஒருவர் சொந்தமாக பால் பண்ணை ஒன்றை தொடங்குவது என்பது எளிதான ஒன்றல்ல.
பல்வேறு இன்னல்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் அவர் விடாமுயற்சியுடன், வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மிக விரைவில் அவரது நிறுவனம் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
1 கோடிக்கு மேல் விற்பனை
2020 மற்றும் 2021ல் இவரது பால் பண்ணையில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. மாதம் குறைந்தது 3.5 லட்சம் வரையில் நவல்பென் வருவாய் ஈட்டுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பால் விற்பனையில் ஈடுபட்டுவரும் நவல்பென், ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் விற்பனை செய்து வருகிறார். 2021ல் இவரது பண்ணையில் 45 பசு மாடுகள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட எருமைகள் இருந்துள்ளது.
மாவட்ட அளவில் மூன்று முறை Pashupalak விருதும் மூன்று முறை Lakshmi விருதும் நவல்பென் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |