வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 3 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Never eat these 3 foods on an empty stomach- காலையில் சாப்பிடும் உணவுகள் உடலில் எளிதாக உறிஞ்சப்படுவதால், காலை உணவை சரியாக தேர்வு செய்வது முக்கியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உணவு என்று நினைத்து காலையில் சாப்பிடும் சில உணவுகள், குடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, காலையில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

காலையில் சாப்பிடும் உணவுகள் அன்றைய நாள் முழுவதும் குடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய 3 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். மேலும், அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
2. ப்ளாக் காபி
ப்ளாக் காபி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. ஆனால், வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் வயிற்று எரிச்சல், உப்புசம் மற்றும் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
3. காரமான உணவுகள்
காலையில் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து காரமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் அழற்சியையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

என்ன சாப்பிடலாம்?
காலையில் வெறும் வயிற்றில், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
ஊற வைத்த நட்ஸ், ஓட்ஸ், வாழைப்பழம், பிரட் ஆம்லெட், இட்லி சாம்பார், தோசை சாம்பார், ஆப்பிள் மற்றும் வேகவைத்த முட்டைகள் போன்ற குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை உண்ணலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |