இந்த உணவுகளை ஒருபோதும் காலையில் சாப்பிடாதீங்க: ஏன் தெரியுமா?
காலை உணவு நம் அன்றாட நாளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. காலை உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
அதே நேரத்தில் காலை உணவை ஆரோக்கியமான வகையில் எடுத்துக்கொள்ளவேண்டும். உடனடி உணவுகள் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
காலை உணவில் சில உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தவிர்க்கப்பட வேண்டிய சில உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
Shutterstock images
தயிர்
தயிரில் புரோட்டின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது நம் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது.
Shutterstock
சிட்ரஸ் பழங்கள்
பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆனால் சிட்ரஸ் பழங்களை காலை உணவில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வாயு மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும்.
வெள்ளை பிரட்
பெரும்பாலான மக்களின் காலை உணவில் வெள்ளை பிரட் முக்கிய இடம்பெற்றுள்ளது.
வெள்ளை பிரட்டில் மாவு மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்களே உள்ளன. எனவே காலை உணவாக அதனை சாப்பிட வேண்டாம்.
சர்க்கரை உணவுகள்
காலை உணவின் போது வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இது நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்
கேனில் அடைக்கப்பட்ட உணவுகளில் உள்ள சோடியத்தின் அளவு இரத்த அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கச் செய்யும்.
தொடர்ச்சியாக இதனை உட்கொள்வது இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
getty images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |