வாக்களிக்க ஒருமுறை கூட தவறியதில்லை... புதிய சட்டம் அதை தடுக்கும்: பிரித்தானிய பெண்மணி உருக்கம்
பிரித்தானியாவில் புதிதாக அமுலுக்கு கொண்டுவந்துள்ள வாக்காளர் அடையாள அட்டை சட்டம், 93 வயதான தம்மை வாக்களிப்பதில் இருந்து விலக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் பெண்மணி ஒருவர்.
உள்ளாட்சி தேர்தல்
பிரித்தானியாவில் மே 4ம் திகதி உள்ளாட்சி தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. 1950 தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துவரும் 93 வயதான Oonagh Preece என்ற பெண்மணி வாழ்க்கையில் முதல் முறையாக தம்மால் வாக்களிக்க முடியாமல் போகும் என கவலை தெரிவித்துள்ளார்.
Image: SWNS
பிரித்தானியாவில் தற்போது வாக்களிக்க முடியாத நிலையில் 2 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களிடம் புதிய வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பதே காரணம்.
இணையமூடாக புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணபிக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மொத்தம் 85,693 பேர்கள் மட்டுமே உரிய நேரத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் உடல்நிலை, சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் Oonagh Preece புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போயுள்ளது. இலவச அட்டைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 25 என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
@getty
புதிய வாக்காளர் அடையாள அட்டை
Oonagh Preece மட்டுமின்றி, அவருக்கு சூற்று வட்டாரத்தில் பலரது வாக்குரிமையும் புதிய அடையாள அட்டை விதியால் பறிக்கப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. ஆனால், பொதுத்தேர்தலுக்கு அஞ்சல் வழியாக வாக்களிக்க முடியும் எனவும், அதற்கு புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை தேவை இருக்காது எனவும் Oonagh Preece குடும்பம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில், புதிய வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில் வாக்குச்சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள், மேலும், அவர்களை கணக்கெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
@PA
தேர்தல் விதி மீறல்களை தடுக்கவே புதிய வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே, வாக்காளர்களின் விண்ணப்பங்களில் 18ல் 1 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
சில கவுன்சில்கள் புதிய வாக்காளர் அதிகாரச் சான்றிதழுக்கான விண்ணப்பங்களில் 15 சதவீதம் வரை நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் மொத்தமுள்ள 230 கவுன்சில்களில் 76ல் வியாழனன்று தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.