இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குளிக்கக்கூடாது.., ஏன் தெரியுமா?
பொதுவாக இடியுடன் கூடிய மழை பெய்யும்போது திறந்த வெளிகளிலும், மரத்திற்கு அடியிலும் நிற்கக்கூடாது என சொல்வார்கள்.
அதேபோல், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குளிப்பது ஆபத்தான ஒரு பழக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால், நம் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் பிளம்பிங் அமைப்புகள் பொதுவாக மின்சாரத்தைக் கடத்தும்.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குளிப்பது, பாத்திரங்களை கழுவுவது மற்றும் குழாய்களைத் தொடுவது போன்ற செயல்கள் ஆபத்தானவை.
பொதுவாக மின்னல் என்பது ஒரு பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தை தாக்கும்.
அவ்வாறு மின்னல் ஒரு கட்டடத்தை தாக்கும்போது அக்கட்டடத்தின் இருக்கும் வயரிங் மற்றும் பிளம்பிங் வழியாக பயணிக்கக் கூடியது.
மெட்டல் பைப்களும் அவற்றுக்குள் இருக்கும் தண்ணீரும் திறமையான மின்சாரக் கடத்திகளாகச் செயல்படும்.
நீங்கள் குளிக்கும்போது, மின்னல் உங்கள் வீட்டை தாக்கினால் உருவாகும் மின் எழுச்சி, குழாய்கள் வழியாக பயணித்து உங்களை மின்சாரம் தாக்கக்கூடும்.
எனவே, இடியுடன் மழைபெய்யும்போது குளிப்பது, பாத்திரம் கழுவது என நீர் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்ப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |