இந்த பழங்களின் விதைகளை எப்போதும் தூக்கி எறியாதீர்கள்..!! பல நன்மைகள் ஒளிந்துள்ளதாம்
பொதுவாக நம் சாப்பிடும் சில பழங்களின் விதைகள் மிகவும் சத்தானவை என்பதோடு, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளதாக நம்பப்படுகிறது.
அவற்றில் போதுமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
இதன் காரணமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே குப்பைத் தொட்டியில் வீசுவதற்குப் பதிலாக அதனை பயன்படுத்தி பலன்களை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
பூசணி விதைகள்
கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் மிகச் சிறந்த அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
பூசணி விதைகளை பச்சையாகவே சாப்பிடலாம், ஆனால் வறுத்த விதைகள் இன்னும் சுவையாக இருக்கும்.
பப்பாளி விதை
இந்த விதை பல நோய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அபாயத்தைத் தடுக்கும் திறன் கொண்டது.
பப்பாளி விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன.
பப்பாளி விதைகளை பச்சையாகவே சாப்பிடலாம். ஆனால் அவை கடுமையான வாசனை கொண்டது என்பதால் உண்ணும் போது சற்று கவனமாக இருக்கவும்.
புளி விதை
இது தவிர, புளி விதைகளும் உங்களுக்கு நல்லது. இந்த விதைகள் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் பற்களுக்கும் நன்மை பயக்கும்.
இவற்றை சாப்பிடுவதால் தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் மிக குறைவு.