புதிய 2025 Honda Shine 125 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
Honda நிறுவனம் அதன் புதிய 2025 Shine 125 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகன வரிசையை இந்திய சந்தைக்காக மேம்படுத்தி வருகிறது.
Activa 125, SP125, SP160, Livo மற்றும் Unicorn ஆகியவற்றை அப்டேட் செய்த பின்னர், நிறுவனம் Shine 125-ன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பிப்ரவரி 13-ஆம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளது.
OBD2B emission விதிகளின்படி இந்த 125CC கம்யூட்டர் மோட்டார்சைக்கிளின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பைக் இப்போது Bluetooth connectivity மற்றும் navigation போன்ற சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது. இந்த பைக் E20 பெட்ரோலிலும் இயங்கும்.
நிறுவனம் இந்த பைக்கை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
அலாய் வீல்களுடன் கூடிய முன்புற டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.84,493-க்கும், அலாய் வீல்கள் கொண்ட முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.89,245-க்கும் கிடைக்கிறது.
125சிசி கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில், இந்த பைக் Hero Glamour Xtack, Hero Super Splendor, TVS Rider போன்றவற்றுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
New 2025 Honda Shine 125, 2025 Honda Shine 125cc price