புதிய அம்சங்களுடன் Triumph Speed Twin 1200 அறிமுகம்., சில கார்களை விட விலை அதிகம்.!
புதிய அம்சங்களுடன் 2025 Triumph Speed Twin 1200 இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ஆனால், இதன் விலை இந்தியாவில் விற்கப்படும் பிரபலமான குடும்ப கார்களை விடவும் விலை அதிகம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஸ்பீடு ட்வின் 1200 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் இந்த பைக்கை வெளியிட்டது. இது Standard மற்றும் RS என 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.12.75 லட்சம் மற்றும் பாதுகாப்பிற்காக cornering ABS மற்றும் and traction control-உடன், road மற்றும் rain என இரண்டு ரைடிங் மோடுகளையும் பெறுகிறது.
புதிய Triumph Speed Twin 1200 பைக்கில் Speedmaster போன்ற LED ஹெட்லைட்டுகள், பின்புறத்தில் இன்வெர்டட் ஷாக் அப்சார்பருக்கு பதிலாக suspended RSU-க்கள் மற்றும் புதிய engine casings மற்றும் மெலிதான exhaust muffler ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
Standard வேரியண்ட் white, red மற்றும் silverமூன்று வண்ண விருப்பங்களைப் பெறும், அதேபோல் RS வேரியண்ட் இரண்டு (black and orange) வண்ண விருப்பங்களைப் பெறும்.
இந்த பைக்கில் Trident 660 போன்ற LCD display instrumentation, switchgear கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் USB-C சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய Marzocchi forks மற்றும் சஸ்பென்ஷனுக்காக Ohlins shock absorbers வழங்கப்பட்டுள்ளன, அதே பிரேக்கிங்கிற்கான காலிபர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளுடன் நேரத்தில் சூப்பர் பைக்-ஸ்பெக் Brembo Stylema பொருத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Triumph Speed Twin 1200, Triumph Speed Twin 1200 RS,Triumph Speed Twin 1200 Standard