அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு அதிகம்
அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது கூறப்படுகின்றது.
அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் 15-ந் திகதி (திங்கட்கிழமை) உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.