சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதுபோல செயல்படும் பிரித்தானிய உள்துறைச் செயலர், சிறுபிள்ளைகளை கூட விட்டுவைக்க விரும்பவில்லைபோலும்.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு
ஆம், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் ஓவர் கோட், ஜாக்கெட் அல்லது கையுறைகளை அகற்றி, அவர்கள் மின்னணு கருவிகள் எதையாவது மறைத்துவைத்துள்ளார்களா என பரிசோதிக்க புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு புதிய விதிகள் அனுமதியளிக்க உள்ளன.

விடயம் என்னவென்றால், சிறுபிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, அவர்கள் வாய்க்குள் சிம் கார்டு போன்ற எதையாவது மறைத்துவைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவும் புதிய புலம்பெயர்தல் விதிகள் அனுமதிக்க உள்ளன.
ஆட்கடத்தல்காரர்கள் குறித்த ஏதாவது தகவல்கள் இந்த புலம்பெயர்வோரின் மொபைல்களில் இருக்கும்பட்சத்தில் அவற்றை பறிமுதல் செய்யவும் புதிய விதிகள் அனுமதியளிக்க உள்ளன.
இந்த புதிய புலம்பெயர்தல் விதிகளுக்கு, இந்த வாரத்தில் மன்னருடைய அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
மக்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படவேண்டும், குற்றவாளிகளைப் போல நடத்தக்கூடாது என்று கூறியுள்ள சிறார் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள், ஏற்கனவே ஆபத்தான கடல் பயணத்தால் மிரண்டுபோயிருக்கும் சிறுபிள்ளைகளை இப்படி வாய்க்குள் எல்லாம் சோதனை செய்து மோசமாக நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |