ட்ரம்புக்கு பதிலாக ஜே.டி.வேன்ஸ்... ஜோதிடக் கலைஞரின் கணிப்பு
New Baba Vanga' psychic says Donald Trump won't see out term: ட்ரம்ப் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்கமாட்டார் என ஜோதிடக்கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில் ட்ரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியிடம் இழந்துள்ளது.
இந்நிலையில், நேற்று வெளியான செய்தி ஒன்றில் பிரபல ஜோதிடக் கலைஞர் ஒருவர், ட்ரம்ப் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

ட்ரம்புக்கு பதிலாக ஜே.டி.வேன்ஸ்
புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் பிரித்தானிய ஜோதிடக்கலைஞரான செலினா என்பவர், பிரித்தானிய இளவரசரான ஹரி மீண்டும் பிரித்தானியா திரும்புவார், ட்ரம்பைக் கொல்ல முயற்சி நடக்கும், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் என்பது போன்ற முக்கிய விடயங்களை துல்லியமாகக் கணித்தவர்.
இந்நிலையில், ட்ரம்ப் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்கமாட்டார் என்று கூறியுள்ளார் செலினா.
ட்ரம்புக்கு பதிலாக, துணை ஜனாதிபதியான ஜே.டி.வேன்ஸ் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்றும் கூறியுள்ளார் செலினா.
அதாவது, ட்ரம்பின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ள செலினா, அடுத்த ஆண்டில் அவரது நிலைமை மேலும் மோசமாகும் என்றும், அவருக்கு இதயத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கணித்துள்ளார்.

ஆகவே, மருத்துவர்கள் அவரை ஓய்வெடுத்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுவார்கள் என்றும், அதனால், ட்ரம்புக்கு பதிலாக வேன்ஸ் ஜனாதிபதியாவார் என தான் கருதுவதாகவும் செலினா தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இப்படி ட்ரம்புக்கு பதிலாக வேன்ஸ் ஜனாதிபதியாவார் என ஒருவர் கூறுவது இது முதல் முறையல்ல!
ஏற்கனவே, அரசியல் விமர்சகரான ஜேம்ஸ் கார்வில் என்பவரும், ட்ரம்பால் இடைக்காலத் தேர்தல் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும், அவர் மென்மையானவர். அதனால் அவர் பதவி விலகுவார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
