கூகுள் கொண்டுவரும் புதிய தடை
ஸ்மார்ட் கைப்பேசிகளில் நிறுவப்படும் அப்பிளிக்கேஷன்கள் பல்வேறு வகையான உளவு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அப்பிளிக்கேஷன்கள் ஊடாக பயனர்களின் இருப்பிடங்களை அறிதல், பயணம் செய்யும் இடங்களை அறிதல், மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ள ஏனைய அப்பிளிக்கேஷன்கள் தொடர்பான தகவல்களை திரட்டுதல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படடுகின்றன.
இவற்றில் ஏற்கணவே நிறுவப்பட்டுள்ள ஏனைய அப்பிளிக்கேஷன்களை அறிந்துகொள்ளும் வசதியானது பயனர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு கூகுள் நிறுவனம் இவ் வசதிக்கு தடையினை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அதாவது அன்ரோயிட் சாதனங்களில் நிறுவப்படும் எந்தவொரு அப்பிளிக்கேஷனும் எதிர்காலத்தில் ஏனைய நிறுவப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன்கள் தொடர்பான தகவல்களை திரட்ட முடியாது.