லண்டன் தெருவில் துண்டினால் சுற்றப்பட்ட பெண் குழந்தை! நடந்து சென்றவருக்கு அதிர்ச்சி
பிரித்தானியாவின் லண்டன் நகர வீதியில், பெண் குழந்தை ஒன்று துண்டினால் சுற்றப்பட்டு ஷாப்பிங் பையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லண்டனின் Newham-யில் உள்ள Greenway மற்றும் High Street South சந்திப்பில், நபர் ஒருவர் தனது நாயை அழைத்துக் கொண்டு நடைபாதையாக சென்றுள்ளார்.
அப்போது ஷாப்பிங் பை ஒன்றை கண்டுள்ளார். அதில் பெண் குழந்தை ஒன்று துண்டினால் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பொலிஸார், புதிதாக பிறந்திருந்த அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
அத்துடன் குழந்தையின் பாதுகாப்பிற்காக உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் Newham கவுன்சில் நகரை தொடர்பு கொண்டனர். குழந்தைக்கு எந்தவித காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தையின் தாயை யாராவது அடையாளம் கண்டால், விரைவில் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |