கனேடிய நகரம் ஒன்றில் பள்ளி கழிவறைகளில் கதவுகள் அகற்றப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவமாணவிகள்
கனேடிய நகரம் ஒன்றில் அமைந்துள பள்ளி ஒன்றிற்குச் சென்ற மாணவ மாணவிகள், இடைவேளையின்போது தங்கள் கழிவறைகளில் கதவுகள் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
Sackville நகரில் அமைந்துள்ள Tantramar Regional High School என்ற பெயர் கொண்ட அந்த பள்ளியில் பயிலும் Madyson Wells என்ற மாணவி, அது குறித்து புகார் கூற பிரின்சிபல் அறைக்குச் சென்றார், அங்கே அவளைப்போலவே மற்ற மாணவமாணவிகளும் கூடியிருந்தார்கள். வாக்குவாதம் அதிகரிக்க, சில மாணவமாணவிகளை இடைநீக்கம் செய்தார் பிரின்சிபல்.
மாணவமாணவியர் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு அமர, பொலிசார் வரவழைக்கப்பட்டார்கள்.
எதிர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் கதவுகள் பொருத்தப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், சில புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது, பிள்ளைகள் கழிவறைகளைப் பயன்படுத்தும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் கழிவறைக் கதவுகள் திறந்தே இருக்கும்.
பிள்ளைகள் கழிவறைக்குச் செல்லும் நேரம் குறைக்கப்படும். ஒரு நேரத்தில் இத்தனை பேர்தான் கழிவறைக்குச் செல்லவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படும்.
அவ்வப்போது கழிவறைகளை அலுவலர்கள் வந்து சோதனை செய்வார்கள் என பல விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இனி நான் அந்த பள்ளிக்குப் போக விரும்பவில்லை என்கிறார் Madyson. அவரது தாயாரும், இது பிள்ளைகளின் தனியுரிமையை மீறும் செயல் என பிரின்சிபலிடம் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், யாரோ சில மாணவமாணவிகள் கழிவறையில் கஞ்சா புகைத்திருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்காக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக நினைத்துக்கொண்டு கழிவறைக் கதவுகளை அகற்ற, பிரச்சினை பெரிதாக, இப்போது வேறு வழியில்லாமல் மீண்டும் கதவுகளைப் பொருத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது!