பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது
New campaign against EU membership launches: பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விடயத்துக்கு எதிராக பிரச்சாரம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிராக ஒரு புதிய பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், மீன் பிடித்தல், உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விமானப்பயணம் என பல விடயங்களில் பல இடையூறுகளை பிரித்தானியர்கள் சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விடயத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.
சமீபத்தில் டப்ளினில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில், இருதரப்புக்கும் பலனளிக்கும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
அதைத் தொடர்ந்து, அடுத்த வாரம், அதாவது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி, பிரஸ்ஸல்ஸ் நகரில், பிரித்தானியா - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.
அந்த மாநாட்டின்போது, ஆன்டி பர்னாம், உணவு, எரிசக்தி மற்றும் இருதரப்புக்கிடையிலான இளைஞர் போக்குவரத்து தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையாக எதிர்ப்பு
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விவகாரம் தொடர்பில், அவரது கட்சிக்குள் உள்ள சிலரும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையுமானால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெருமளவில் பணம் கொடுக்கவேண்டிவரும் என்பதுடன், தடையில்லா போக்குவரத்து காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளிலிருந்து ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு புலம்பெயரலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பட்சத்தில், ஏராளமான ஐரோப்பிய ஒன்றிய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விடயத்துக்கு, வெளிப்படையாகவே எதிர்ப்பு துவங்கியுள்ளது.
ஆம், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிராக ஒரு புதிய பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
ஆலிவர் லூயிஸ் என்பவர் தலைமையிலான, ஸ்டே அவுட் (Stay Out) என்னும் அமைப்பே, இந்த பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது.

இந்த ஆலிவர், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என பிரச்சாரம் செய்த வோட் லீவ் (Vote Leave) என்னும் அமைப்பில் பணியாற்றியவர் ஆவார்.
ஆலிவருக்கு, வோட் லீவ் அமைப்பின் தலைவரான லார்ட் கோவ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது, நமது சட்டங்கள், எல்லைகள், பணம் மற்றும் வர்த்தகம் என அனைத்தின் மீதான கட்டுப்பாட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதற்கு சமம் என்று அவர் எச்சரித்துள்ளார்.