ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் விரும்பும் பிரபல அணிக்கு புதிய கேப்டன் நியமனம்! புகைப்படம்
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 நிலைகளிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.
இதில், இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இடது தோளில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து போட்டி தொடரில் இருந்து அவர் விலகினார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அடுத்து நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் காலியாக உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.
இதன் முடிவில், துணை கேப்டன் ரிஷாப் பண்ட் அணிக்கு தலைமையேற்க முடிவாகியுள்ளது.