லண்டனை உலுக்கிய பெரும் சம்பவம்! நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட குடும்பத்தினர்: வெளியான சிசிடிவி காட்சி புகைப்படங்கள்
லண்டனில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடத்தப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கொடூர கொலைகாரனிடம் பேசும் சிசிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தெற்கு லண்டனின் Clapham-ல் உள்ள நண்பருடைய வீட்டில் இருந்து 33 வயது மதிக்கத்தக்க Sarah Everard என்ற பெண் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை இடைமறித்த Wayne Couzens(48) என்ற நபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி போன்று போலியாக காட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண், தான் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் என்று கூறியுள்ளார்.
அதன் பின் அவரது கைகளை முதுகுக்கு பின்னால் வைத்து, போலியான ஒரு கைது செய்து, கார் ஒன்றில் ஏற்று சுமார் 80 மைல் தூரம் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை எரித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் தற்போது குறித்த கொலைகாரன் அவரை கடத்திச் செல்வதற்கு முன்பு, அவரிடம் பேசும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், Sarah Everard தெற்கு லண்டனில் இருக்கும் Poynders Court-ன் சாலை ஓரத்தில் நிற்பதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, Sarah Everard-ன் தந்தை, குற்றவாளியிடம் நீங்கள் செய்ததை என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது.
நீங்கள் எங்களுக்கு அளித்த வலி மற்றும் சித்திரவதையுடன் ஒப்பிட முடியாது. எங்கள் மகளைக் கொன்றீர்கள், அவளுடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குடும்பத்தினர் மற்றும் அவளுடைய நண்பர்களின் இதயங்களை உடைத்துள்ளீர்கள் என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், அவரின் சகோதரி, கண்ணீர் விட்ட படி, அவளுடைய நம்பிக்கையும், கனவுகளையும் பறித்துவிட்டீர்கள். நான் என் சகோதரியுடன் இன்னும் எவ்வளவோ காலம் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அழித்துவிட்டீர்கள் என்று கலங்கினார்.
தாயார், நாங்கள் எங்கள் குடும்பத்தின்ல் 5 பேர் இருந்தோம், ஆனால், இப்போது நான்கு பேர் தான் இருக்கிறோம். அவளின் மரணம் எங்கள் வாழ்வில் ஒரு நிரப்ப முடியாத கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அவளை நினைத்து ஏங்குகிறேன்.
அவளைப் பற்றிய அனைத்து அழகான விஷயங்களும் எனக்கு நினைவிருக்கிறது அவள் ஒரு அழகான நடனக் கலைஞர், அவள் ஒரு அற்புதமான மகள் என்று வேதனையுடன் கூறினார்.
Sarah Everard-ன் இந்த மரணம், பிரித்தானியாவில் இருக்கும் பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத உணர்வை கொடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கிற்கான தண்டனை நாளை வழங்கப்படுகிறது. இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.