WhatsApp இன் புதிய மாற்றம்! இனி இப்படியும் செய்யலாம்
சமீபத்தில், வாட்ஸ்அப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
அவதார் அனிமேஷன் செய்யப்பட்ட காட்சிப் படம், ஒரே நேரத்தில் 100 படங்களைத் தேர்ந்தெடுக்க என பல புதுவிதமான அம்சங்களை கொண்டுவந்தது.
இப்போது, மெட்டாவுக்குச் சொந்தமான நிறுவனம் வாட்ஸ்அப்பில் தேவையற்ற அழைப்புகளை முடக்க பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
புதிய அம்சம்,
அறியப்படாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து (silence)என்று வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தானாகவே ஃபோனில் அமைதியாகிவிடும். ஆனால், அதில் மிஸ்டு கால்கள் போன்ற அறிவிப்புகள் கோல் வரிசையில் இருக்கும். மேலும், பயனர்கள் திரும்ப அழைக்க அல்லது புறக்கணிக்க முடிவு செய்யலாம்.
வீடியோ காலை அறிமுகப்படுத்திய பிறகு பல பெண்கள் மோசடியில் சிக்கியுள்ளனர். screen record மூலம் record செய்வது ஒரு முறையாக இருந்தது. தற்போது அவ்வாறு செய்ய இயலாமல் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை முடக்க இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் அவற்றைத் தவிர்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து பார்க்கலாம்.
இந்த புதிய அம்சம் பயனளிக்கின்றதா என்று பார்த்து அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.