ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய மாற்றங்கள்.., சிலிண்டர் முதல் Google Map வரை
ஆகஸ்ட் 1 முதல் பணம் சார்ந்த மாற்றங்கள் என்னென்ன வரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதம் பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அது நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கேஸ் சிலிண்டர் விலை, மின்கட்டண உயர்வு என்று பல்வேறு விடயங்களில் மாற்றங்கள் நடக்கிறது. இப்போது நாம் ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.
சிலிண்டர் விலை
ஆகஸ்ட் 1 -ம் திகதி முதல் சமையல் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படலாம். ஒவ்வொரு மாதமும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் திருத்திய பின்னர் சிலிண்டரின் புதிய விலை நிர்ணயம் செய்யப்படும்.
ஜூலை மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதால், இந்த முறையும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் செலுத்தும் முறைகள்
மின் கட்டணம், வாடகை உள்ளிட்ட விடயங்களுக்காக கிரெடிட் கார்டு மூலம் தாமதமாக பணம் செலுத்தும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இதில் கல்லூரி அல்லது பள்ளி இணையதளத்தில் இருந்து நேரடியாக பணம் செலுத்துவதற்கு கட்டணம் இல்லை.
ஆனால், MobiKwik, CRED போன்ற புதிய செயலிகளின் மூலம் பணம் செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.3000 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இ
துவே நீங்கள் மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்தி ரூ. 5000 -க்கு மேல் பணம் செலுத்தினால் 1 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
HDFC Credit Card
ஆகஸ்ட் 1 முதல் Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டுகள் ஆகியவை HDFC வங்கியால் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Card வைத்திருப்பவர்கள் Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 1.5 % புதிய காயின்களை பெற முடியும்.
EMI செயலாக்கக் கட்டணம்
தாமதமாக பணம் செலுத்துவதை தவிர்க்க எளிதான தவணை வசதி இருந்தாலும், EMI செயலாக்கக் கட்டணம் ரூ.299 வரை செலுத்த வேண்டும்.
HDFC வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த கட்டணமானது ஜிஎஸ்டி கீழ் உள்ளது. இந்த வங்கியில் இருந்து மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கு 1 % கட்டணம் செலுத்த வேண்டும்.
வங்கி விடுமுறை
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை. இதில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் அடங்கும்.
இதைத்தவிர ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 26 ஆகிய திகதிகளிலும் விடுமுறை தான்.
Google Map விதிகள்
ஆகஸ்ட் 1 முதல் Google Map -ல் மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது சேவைக்கான கட்டணத்தை 70 % குறைத்துள்ளது.
மேலும், கூகுள் மேப்ஸ் (Google Map) சேவைக்கு டொலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் கட்டணம் வசூலிக்கும். இந்த விதியானது சாதாரண பயனர்களுக்கு பிரச்சனையாக இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |