கோவிட், புற்றுநோயை மூன்று நிமிடங்களில் கண்டறியும் சாதனம்; பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூன்று நிமிடங்களில் கோவிட் மற்றும் புற்றுநோயைக் கண்டறியும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் பல்வேறு நோய்க்கிருமிகள் அல்லது புற்றுநோய் உள்ளிட்ட நிலைகளை மூன்றே நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும் சிறிய மரபணு சோதனைக் கருவியை (prototype LoCKAmp device) பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த வைரஸ் கண்டறிதல் சாதனம் பாத் பல்கலைக்கழகத்தின் (University of Bath) பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் அதை 'உலகின் வேகமான கோவிட் சோதனை' என்று விவரிக்கிறார்கள்.
மூக்கு வழியாகச் சேகரிக்கப்பட்ட மாதிரியை லேப்-ஆன்-ஏ-சிப் (lab on a chip) தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் விரைவாக இந்தக் கருவி மூலம் கோவிட் இருக்கிறதா என்று சோதிக்கலாம். இந்த சோதனையின் முடிவை ஸ்மார்ட் போன் செயலியில் காணலாம்.
இந்த சாதனத்தில் அழுக்கு நீரை பரிசோதித்து, நோய்களை பரப்பும் வைரஸ்கள் மற்றும் கோவிட் போன்ற தொற்றுகளை இதில் கண்டறிய முடியும்.
"இங்கிலாந்தில் கோவிட் இரண்டாவது அலையின் போது LoCKAmp ஐ ஆராய்ச்சி செய்து உருவாக்கத் தொடங்கினோம். 10 நிமிடங்களுக்குள் PCR சோதனை போன்ற வைரஸின் மரபணு அடையாளத்தை மேற்கொள்ளக்கூடிய சிறிய, குறைந்த விலை சாதனத்தை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதைச் செய்துள்ளோம், ஆனால் அது உண்மையில் மூன்று நிமிடங்களுக்குள் வேலை செய்ய முடியும் என்று கண்டறிந்தார்" என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய Bath's Centre for Bioengineering & Biomedical Technologies-ஐ (CBio) சேர்ந்த Despina Moschou கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Covid-19 Virus, Cancer, LoCKAmp Device, lab on a chip Technology