Royal Enfield Guerrilla 450 பைக்கின் புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம்.., விலை எவ்வளவு?
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கொரில்லா 450 பைக்கின் புதிய கலர் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Royal Enfield Guerrilla 450
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் Guerrilla 450 பைக்கின் புதிய கலர் ஆப்ஷனிற்கு ரூ.2.49 லட்சம் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.
இது ஷாடோ ஆஷ் (Shadow Ash) நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆலிவ் கிரீன் நிறத்தில் Tank மற்றும் கருப்பு நிறத்தில் Detailing வழங்கப்பட்டுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள Sherpa 450 Engine ஆனது 452 சிசியில் Single cylinder, liquid cooled Engine ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இது 8000 ஆர்பிஎம்மில் 39.52 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மோட்டார் ஆறு வேக Gearbox மற்றும் Slip-and-assist clutch உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முழு Digital instrument cluster, Google Map, Cluster Digital Display, Tripper Pod ஆகிய அம்சங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |