புதிய கொரோனா மாறுபாடு... சுவிட்சர்லாந்திலும் உருவாகியுள்ள அச்சம்
புதிய கொரோனா மாறுபாடு பல நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுவரும் விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா மாறுபாடு
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான பிரோலா வைரஸ் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும் அது குறித்த கவலை உருவாகியுள்ளது.
இந்த பிரோலா வைரஸ் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டது. மேலும், முன்பு எடுத்துக்கொண்ட கோவிட் தடுப்பூசிகளையும் மீறி இந்த பிரோலா வைரஸ் தொற்றை ஏற்படுத்தலாம் என கருதப்படுவதே அச்சத்துக்கு காரணம் ஆகும்.
கழிவு நீரை ஆய்வுக்குட்படுத்தியதில், சுவிட்சர்லாந்திலும் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொற்று குறித்து பலரும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையில், சூரிச் மாகாணம் இலவச கொரோனா பரிசோதனைகளை மீண்டும் துவக்கியுள்ளது.
ஒரே நல்ல விடயம் என்னவென்றால், பிரித்தானிய அறிவியலாளராகிய Francois Balloux, பிரோலா அதிக அளவில் பரவினாலும், கோவிட் பரவத்துவங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டதுபோல, மோசமான நோய்வாய்ப்படுதலோ மரணங்களோ ஏற்படாது என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |