கொரோனா அதிசய மாத்திரைக்கு சுவிட்சர்லாந்தில் பெருகும் ஆதரவு
கொரோனாவுக்கான அதிசய மாத்திரைக்கு சுவிஸ் பெடரல் நிர்வாகம் விரைவாக முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
அமெரிக்காவின் Merck & Co நிறுவனத்தின் molnupiravir என்ற மாத்திரையானது கொரோனாவுக்கு அதிரான அதிசய மாத்திரையாக கருதப்படுகிறது.
இதனால் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுபவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறையும் என்றே கூறப்படுகிறது. தற்போது உலக நாடுகள் பல குறித்த மாத்திரைகளை முன்பதிவு செய்ய போட்டியிட்டு வருகின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்தில் இருந்து இதுவரை உத்தியோகப்பூர்வமாக குறித்த நிறுவனத்தை நாடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போன்றல்லாமல் இந்த மாத்திரைக்கு துரிதமாக அனுமதி அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
அதிசய மருந்து தொடர்பிலான தகவல் வெளியானதும் சுவிஸ் அரசியல்வாதிகள் பெடரல் நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
பெடரல் கவுன்சில் விரைவாக மருந்தை முன்பதிவு செய்ய வேண்டும், இதனால் சுவிட்சர்லாந்து அதை விரைவாகப் பெற முடியும் என தெரிவித்துள்ளார் SVP தேசிய கவுன்சிலர் Therese Schläpfer.
மேலும் சுவிட்சர்லாந்து நிர்வாகமும் இந்த மருந்து தொடர்பில் துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.