சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கொரோனா விதிமுறைகள்
சுவிட்சர்லாந்தில் இன்று முதல் சில புதிய கொரோனா விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன.
அதன்படி, உணவகங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் கட்டிடங்கள் முதலான பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் மூடிய அறைகளுக்குள் செல்ல இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்.
ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளதுபோல், வெளியிடங்களில் அமர்ந்து உணவு உண்ணுவதற்கோ, மதுபானம் அருந்துவதற்கோ தடுப்பூசி சான்றிதழைக் காட்டவேண்டிய அவசியல் இல்லை.
அதேபோல், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை.
இன்று அறிமுகமாகும் இந்த விதிமுறைகள், அடுத்த ஆண்டு ஜனவரி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
எப்படியாகிலும் மக்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெடரல் அரசு இந்த திட்டத்தை வடிவமைத்தது. அரசின் திட்டம் பலித்துள்ளதுபோலவே தெரிகிறது. காரணம், நாடு முழுவதிலுமுள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக ஏராளமானோர் முன்பதிவு செய்துவருவதாக தடுப்பூசி மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன.