புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு! முதலிடம் யாருக்கு? சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர்கள் முன்னேற்றம்
ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தர வரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தவொரு இலங்கை வீரரும் இடம்பெறவில்லை.
ஆனால் வங்காள தேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர் குசல் பெரேரா 566 புள்ளிகளுடன் 42வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் முதலிடத்திலும், வங்கதேசத்தின் மெயிதி அசன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில் வங்காள தேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை வீரர் துஸ்மந்தா சமீரா பட்டியலில் முன்னேற்றம் கண்டு 33வது இடத்தை பிடித்துள்ளார்.