பிரான்சில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரான்சில் கொரோனாவின் 3வது அலை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என நாட்டின் பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தலைநகர் பாரிஸ் உட்பட 16 பகுதிகளில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கு போல் கடுமையாக இருக்காது, மேலும், நாட்டில் கொரோனாவின் 3வது அலை தொடர்ந்து அதிகாரித்து வருகிறது என பிரதமர் Jean Castex கூறினார்
. மேலும், நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் AstraZeneca தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் மற்றும் AstraZeneca தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக பிரதமர் Jean Castex கூறினார்.
குறிப்பாக தலைநகர் பாரிஸில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு 1200 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், இது நவம்பரில் 2வது அலை உச்சத்தில் இருந்து போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran கூறினார். புதிய நடடிக்கையின் படி, அத்தியாவசிமற்ற வணிகங்கள் மூடப்படும் ஆனால் பள்ளிகள் திறந்திருக்கும்.
மக்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ-க்குள் தான் வெளிபுற உடற்பயிற்சி செய்ய அனுமதி, மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்க அனுமதியில்லை, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை விரிவாக படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
பிரான்சின் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இருப்பினும், இது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதாவது 19:00 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.