தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்- எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
New cyclone heading towards tamil nadu- வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் கூறுகையில்..,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், வரும் 12ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று, வரும் 15ஆம் தேதி இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.
அதன்பிறகு மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை தொடங்கி, 20ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யக்கூடும்.
புயலாக வலுப்பெற்றால், வரும் 19ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தமிழக கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |