யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதி: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தேர்வு
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய பீடாதிபதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கான புதிய பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைப்பீட சபையினால் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, புதிய பீடாதிபதியாக நாளை(21.03.2026) முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இ ரகுராமின் பதவிக் காலம் நிறைவு ஆகியிருந்தது.

இடை நிறுத்தி வைக்கப்பட்ட நியமனம்
இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தம் செயல்பாட்டிற்கு வரும் வரை பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதிகள் நியமனத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இடை நிறுத்தி வைத்திருந்தது.
1978 ஆம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம் 2026/2 நடைமுறைக்கு வந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்ததை தொடர்ந்து, இன்று(20.03.2026) புதிய பீடாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், கலைப்பீட சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். சுமார் 27 கூடுதல் வாக்குகள் பெற்று பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா-வை புதிய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |