இனி பிடிக்காதவர்களை பிளாக் செய்து விடுங்கள்! வாட்ஸ் அப்பின் அசத்தலான அப்டேட்
வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகிலேயே சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் வாட்ஸ் அப் செயலி தான். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
அதிலும் இந்தியாவில் வாட்ஸ் அப் செயலுக்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர். இந்த நவீன காலத்தில் சோசியல் மீடியாவை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது.
இந்நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் அவ்வப்பொழுது வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக புது வசதிகளை அறிமுகப்படுத்துவதுண்டு. அதுபோல தற்போது புது அப்டேட் வெளியாகவுள்ளது.
முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் கடைசியாக ஆன்லைனில் வந்தது, புரொஃபைல் புகைப்படம் போன்ற தங்களைப் பற்றிய சுயவிவரங்கள் அனைத்தையும் அனைவரும் பார்க்கலாம் அல்லது தொலைபேசியில் எண் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம். இல்லையெனில் எவரும் பார்க்க முடியாது என்று மூன்று வகைகள் மட்டுமே இருந்தது.
இந்நிலையில் பயனாளர்களின் புரொஃபைல் புகைப்படம் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை ஒரு சிலர் பார்க்க இயலாத வகையில் அமைக்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த வசதி மூலம் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றவர்களுக்கு அதாவது நாம் விரும்பாதவர்களுக்கு தெரியாதவாறு அமைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.