ட்ரம்ப் மனைவி மெலானியா தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பை உருவாக்கியுள்ள செய்தி
எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியாகிவரும் ஆவணங்களால் பல பிரபலங்கள் சிக்கலுக்குள்ளாகிவருகிறார்கள்.
அவ்வகையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியா குறித்த செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை உருவாக்கிவருகிறது.
ட்ரம்ப் மனைவி மெலானியா தொடர்பில்...
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

இந்நிலையில், மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனுடன் யாரெல்லாம் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பிரபலங்கள் பலருக்கு சிக்கலை உருவாக்கிவருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும் எப்ஸ்டீனின் நண்பர்தான் என கூறப்படும் நிலையில், ட்ரம்ப் அதை தொடர்ந்து மறுத்துவருவதுடன், மக்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பும் வகையில் கவனம் ஈர்க்கும் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.
ஆனாலும் ஊடகங்கள் ட்ரம்பை விடுவதுபோல் தெரியவில்லை.

ஆம், தற்போது அந்த மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனுக்கும், ட்ரம்பின் மனைவியான மெலானியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
Surprise surprise pic.twitter.com/EaMImOJpzS
— 𝕳𝖔𝖑𝖑𝖞 𝕳𝖊𝖆𝖗𝖙 🏴 (@holly___xxx___) February 2, 2026
மெலானியாவின் உண்மையான பெயர் மெலானியா நாஸ் (Melania Knauss). அவர் ஸ்லோவேனியா நாட்டவரான ஒரு மொடல். தான் பார்ட்டி ஒன்றில்தான் ட்ரம்பை முதன்முறையாக சந்தித்ததாக கூறியிருந்தார் மெலானியா.
மொடலிங் ஏஜண்டான Paolo Zampolli என்பவர் மெலானியாவை ட்ரம்புக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் செய்திகள் வெளியாகிவந்தன.

ஆனால், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள், மொடலிங் ஏஜண்டான Zampolliக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், உண்மையில் எப்ஸ்டீன்தான் மெலானியாவை ட்ரம்புக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் தெரிவிக்கின்றன.
ஆக, ட்ரம்பை சந்திக்கும் முன்பே மெலானியாவுக்கு எப்ஸ்டீனுடன் அறிமுகம் இருந்ததாக கருதப்படுகிறது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மெலானியாவின் முன்னாள் ஏஜண்டான அதே Paolo Zampolli, தற்போது ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இந்த தகவல் குறித்து ட்ரம்பும் மெலானியாவும் என்ன சொல்லப்போகிறார்கள் பார்க்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |