சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாகும் 18 ஏரிகள்: வெளிவரும் காரணம்
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக ஆய்வுகள் வெளிவரும் நிலையில், ஆண்டுக்கு 18 ஏரிகள் புதிதாக உருவாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை மாறுபாட்டால் பனிப்பாறைகள் உருகி, இந்த ஏரிகள் உருவாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 165 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 1,200 ஏரிகள் இதுபோன்று உருவாகியுள்ளது.
1850ல் குட்டி பனி யுகம் முடிவுக்கு வந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனாலையே குறிப்பாக மத்திய ஐரோப்பியாவில் சுமார் 200 ஆண்டுகாலமாக குளிர்ந்த வெப்பநிலை காணப்படுகிறது.
1850 முதல் 2016 வரையான காலகட்டத்தில் பனிப்பாறை காரணமாக சுமார் 1,200 ஏரிகள் உருவானதில், தற்போது 1,000 எரிகள் இன்னும் காணப்படுகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல ஏரிகள் காணாமல் போனாலும், இன்னொரு பகுதியில் புதிய ஏரி என நூற்றுக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளன.
காலநிலை மாறுபாட்டால் சில நூறு ஏரிகள் உருவாகியிருக்கலாம் என்றே முதலில் நம்பியதாக கூறும் ஆய்வாளர் ஒருவர், ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ஆயிரத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2006 முதல் 2016 வரையில் சுவிட்சர்லாந்தில் ஆண்டுக்கு 18 புதிய ஏரிகள் உருவாகியுள்ளது ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.