உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்! பப்புவா நியூ கினியாவில் பேரழிவு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மாபெரும் மண் சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிருடன் புதைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாபெரும் மண்சரிவு
பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில்(Enga province) உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட மாபெரும் மண் சரிவில் 2,000 க்கும் மேற்பட்ட மக்களை உயிரோடு புதைந்துள்ளனர் என்று நாட்டின் தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
மவுண்ட் முங்காலோவின் ஒரு பகுதி இடிந்து, பரபரப்பாக இருந்த மலைப்பகுதி கிராமத்தில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகள், உணவு தோட்டங்கள் மற்றும் அத்தியாவசிய கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, இது பிராந்தியத்தின் பொருளாதாரத்தை கணிசமாக பாதித்துள்ளது.
முக்கிய சாலைகள் மண் சரிவு குப்பைகளால் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
நீடிக்கும் ஆபத்து
மண் சரிவு தொடர்ந்து நகர்வதால், மீட்பு குழுக்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தொடர்ந்து ஆபத்து உள்ளது, எனவே சூழ்நிலை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.
பப்புவா நியூ கினியாவின் தேசிய பேரிடர் மையம், பேரிடர் நிவாரணத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் ஒத்துழைப்போடு செயல்படுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இதில் தேசிய ராணுவம், பிராந்திய மீட்பு குழுக்கள் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.
சூழ்நிலையின் தீவிரத்தை பற்றி பப்புவா நியூ கினியாவின் வளர்ச்சி பங்காளர்கள் மற்றும் சர்வதேச நட்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்குமாறு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |