எல்லா இடத்திலும் அவை இருக்கின்றன... பிரெஞ்சு நகரமொன்றில் மக்களுக்கு உருவாகியிருக்கும் புதிய தலைவலி
மேற்கு பிரான்சிலுள்ள நகரமொன்றில் மக்களுக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.
அந்த தலைவலிக்குக் காரணம் எறும்புகள்!
ஆம், Saumur என்னும் நகர மக்கள் பெரும் எறும்புத் தொல்லையால் அவதியுற்று வருகிறார்கள்.
அந்த எறும்புகளை ஒழிக்க என்னென்னவோ செய்தும் ஒரு பலனும் இல்லையாம்.
மக்கள் வாழும் இடத்தில் ஏற்கனவே 18 ஹெக்டேர் பரப்புக்கு இந்த எறும்புகள் பரவிவிட்டன.
எங்கு பார்த்தாலும் இந்த எறும்புகள் இருக்கின்றன என்று கூறும் Sylvie Leroy (64), என் பேரப்பிள்ளை இந்த எறும்புகளுக்கு பயந்தே விடுமுறைக்கு என் வீட்டுக்கு வர மறுக்கிறான் என்கிறார்.
Jean-Yves Pineau (69) என்பவர் கூறும்போது, வீட்டுக்கு வெளியே காலை வைக்க முடியவில்லை, காலை வைத்தாலே கடிதான் என்கிறார். எவ்வளவோ பணம் செலவழித்தும் அவரால் அவற்றை ஒழித்துக்கட்ட முடியவில்லையாம்.
இந்த எறும்புகளை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது என்று கூறும் பூச்சியியல் நிபுணர்கள், ஆனால், அவற்றால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள்.
முனிசிபல் அதிகாரிகள் அவ்வப்போது பூச்சி மருந்துகளைத் தெளித்து எறும்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறார்கள்.