பிரான்சில் அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் சட்டம்: சில விவரங்கள்
பிரான்ஸ் அரசு அடுத்த ஆண்டுல் புதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய புலம்பெயர்தல் சட்டம்
பிரான்சில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, புதிய புலம்பெயர்தல் சட்டம் ஒன்றை அடுத்த ஆண்டில் கொண்டுவர பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசு திட்டமிட்டுவருகிறது.
2025 துவக்கத்தில் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.
செப்டம்பரில் பிரான்ஸ் மாணவி ஒருவர் புலம்பெயர்ந்தோர் ஒருவரால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் நாட்டை கொந்தளிக்கச் செய்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, புலம்பெயர்தலை கடுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மிஷெல் பார்னியேர் அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |