சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதாகக் கூறிச் சென்று வாழ்வை முடித்துக்கொண்ட சகோதரிகள்: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதாகக் கூறிச் சென்று வாழ்வை முடித்துக்கொண்ட சகோதரிகள் குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிலுள்ள Phoenix நகரிலிருந்து, பிப்ரவரி 3ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேஸல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள், சகோதரிகளான Lila Ammouri (54) மற்றும் Susan Frazier (49) ஆகிய இருவரும்.
Lila ஒரு மருத்துவர், Susan ஒரு செவிலியர்.
பிப்ரவரி 9ஆம் திகதிக்குப் பின் Lila மற்றும் Susanஇடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் போகவே, Lila மற்றும் Susanஉடைய சக பணியாளர்கள் அவர்களுக்கு மொபைலில் குறுஞ்செய்திகள் அனுப்ப, வந்த பதில் செய்தியைப் பார்க்கும்போது, அதை அனுப்பியது Lila மற்றும் Susan அல்ல, வேறு யாரோ அவர்களுக்கு பதிலாக பதில் அனுப்பியது போல் இருந்ததாக தெரிவிக்கிறார் சகோதரிகளின் நீண்ட கால நண்பரான Dr. David Bilgari.
இதற்கிடையில், பிப்ரவரி 15 வரை, சகோதரிகள் இருவரும் பணிக்குத் திரும்பாததால், Susan பணி செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர் பொலிசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
Lila மற்றும் Susanஉடைய மூத்த சகோதரரான Cal Ammouri (60) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அவர்களுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்கத் துவங்க, பிப்ரவரி 18ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள அமெரிக்கத் தூதரகம், சகோதரிகள் இருவரும் சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்துவந்த சகோதரிகள், குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட்டு ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என குழம்பிப்போயிருக்கிறார்கள் Cal மற்றும் அவர்களுடைய நண்பர்கள்.
இந்நிலையில், சகோதரிகள் திடீரென வாழ்வை முடித்துக்கொள்ளவில்லை என்றும், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுத்தான் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதற்கு ஆதாரமாக, Lila, ஒரு மில்லியன் டொலர்கள் மதிப்புடைய தனது வீட்டை, தங்கள் குடும்ப அறக்கட்டளை ஒன்றிற்கு ஏற்கனவே எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.
பிப்ரவரி மாதம் 3ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குச் சென்ற சகோதரிகள், 11ஆம் திகதி தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள். இந்த தகவலை 18ஆம் திகதிதான் சுவிட்சர்லாந்திலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஆனால், ஜனவரி மாதம் 25ஆம் திகதியே, Lila தன் வீட்டை தங்கள் குடும்ப அறக்கட்டளைக்கு எழுதிவைத்துள்ளார். அதை எந்த சட்டச் சிக்கலுமின்றி அவர் யாருக்கு எழுதி வைத்துள்ளாரோ, அவர் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம். ஆனால், Lila யாருக்கு அந்த வீட்டை எழுதிவைத்துள்ளார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் சகோதரிகள் வாழ்வை முடித்துக்கொண்டதாகக் கருதப்படும் சுவிஸ் தற்கொலை மருத்துவமனையின் புகைப்படங்களும் அதைக் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
பேஸலிலுள்ள Pegasos என்ற தற்கொலை மருத்துவமனையில்தான் Lila, Susan சகோதரிகள் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டதாகக் கருதப்படுகிறது.
அமைதியான சூழல் கொண்ட Pegasosஇல், குளூக்கோஸ் ஏற்றும் குழாய் வழியாகவோ, அல்லது வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புபவருக்கு மிகவும் பிடித்த பானம் ஒன்றில் கலந்தோ, தூங்க வைத்து, நிரந்தரத் தூக்கத்து அழைத்துச் செல்லும் மருந்து கொடுக்கப்படும்.
முதலில் அந்த நபர் ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்ல, பின்னர், தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிடும்.
அதற்கான கட்டணம் 11,000 டொலர்கள்!