பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: தொடர்ந்து வெளிவரும் புதிய தகவல்கள்
பிரான்சில் பிரித்தானிய பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
இந்நிலையில், தொடர்ந்து அந்த விடயம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
மேலும் ஒரு புதிய தகவல்
கடந்த மாத இறுதியில், பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த Karen Carter (65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவசர உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. திருமணமான Karen ஒரு ஆணுடன் தொடர்பிலிருந்ததாகவும், அவரது கொலை தொடர்பாக அவரது தோழி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, தன் மனைவி ஒரு முக்கோணக் காதலில் இருந்ததாகக் கூறப்படுவதைக் கேட்டு தான் கோபமடைந்ததாகவும், அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை தான் நம்பவில்லை என்றும் Karenஉடைய கணவரான ஆலன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், Karen கொல்லப்படுவதற்கு முந்தைய நாள், அவர் விவாகரத்துக்கான ஆவணங்களை தன் கணவரிடம் கொடுத்தது தொடர்பாக Beverley Needham என்னும் தனது தோழியுடன் பேசியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Karen கொல்லப்படுவதற்கு முந்தைய இரவு, உணவு நேரத்தில்,விவாகரத்து ஆவணங்களை உன் கணவரிடன் கொடுத்துவிட்டாயா என தான் Karenஇடம் கேட்டதாகவும், அதற்கு அவர், ஆம் கொடுத்துவிட்டேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கும் என் கணவருக்குமிடையிலான உறவு முடிந்தது என்றும் Karen கூறியதாகவும் Beverley கூறியுள்ளதால் வழக்கு மேலும் சிக்கலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |